டெக்ஸ்லா படத்தில் அபிஷேக் பச்சன்?
ADDED : 1 hours ago
‛லால் சலாம்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் படம் 'டெக்ஸ்லா'. கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். சிறிய பட்ஜெட்டில் குழந்தைகள் படமாக முதலில் ஐஸ்வர்யா திட்டமிட்டிருந்தார். ஆனால், கண்ணன் ரவி தயாரிப்பால் ஜெய், சுராஜ் வெஞ்சராமுடு போன்ற நடிகர்களை உள்ளே கொண்டு வந்து இப்போது ஒரு பெரிய படமாக மாறியுள்ளது. இதில் ஆனந்த்ராஜ், ஜி.எம்.சுந்தர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரம் உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.