400 கோடியை நெருங்கும் 'பெத்தி' வசூல்
ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதிபாபு மற்றும் பலர் நடிப்பில் ஜூன் 4ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'பெத்தி'. இப்படம் 11 நாட்களில் 393 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் நாள் வசூலாக 135 கோடி, மூன்று நாள் வசூலாக 236 கோடி, ஐந்து நாள் வசூலாக 315 கோடி, ஆறு நாள் வசூலாக 332 கோடி, ஒன்பது நாள் வசூலாக 366 கோடி, என இந்தப் படம் வசூலித்துள்ளது.
400 கோடி வசூலை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு வசூலை நெருங்கினாலும் இன்னும் 30 கோடி வசூலித்த பிறகுதான் இப்படம் லாபக்கணக்கை ஆரம்பிக்கும் என்கிறார்கள்.
200 கோடிக்கும் சற்று கூடுதலாக வியாபாரம் நடந்துள்ளதால் இவ்வளவு வசூல் கிடைத்தும் லாபம் ஆரம்பமாகாமல் உள்ளது.
பான் இந்தியா படமாக வெளியானாலும் தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் இப்படத்திற்கு வரவேற்பும், வசூலும் கிடைக்கவில்லை. ஹிந்தி மார்க்கெட்டை மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது ஏமாற்றிவிட்டது.