உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கிலும் பிசியாகும் கயாடு லோஹர்

தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கிலும் பிசியாகும் கயாடு லோஹர்

டிராகன் படத்திற்கு பிறகு இதயம் முரளி, இம்மார்ட்டல், மஞ்சணத்தி, அரசன் போன்ற படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர், மலையாளத்தில் பள்ளிச்சட்டம்பி படத்தை அடுத்து ஐ ஆம் கேம், தி இன்ட்ரோ, தாரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் நானியுடன் தி பாரடைஸ் படத்தில் நடிப்பதை அடுத்து ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இது தவிர, இன்னும் சில தெலுங்கு படங்களில் நடிப்பது சம்பந்தமாகவும் தீவிர பேச்சு வார்த்தையில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கும் கயாடு லோஹர், பக்கா கமர்சியல் கதைகளில் கூடுதலான கிளாமர் உடை அணிந்து நடிப்பதற்கும் ஒப்புதல் கொடுத்து இருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !