பிளாஷ்பேக்: கார்த்திக் பெயரில் உருவான படம்
ADDED : 1 hours ago
பொதுவாக முன்னணி நடிகர்கள் பெயரில் ஒரு படம் தயாராவது ரொம்பவே அபூர்வமானது. அப்படி தயாராகும் படத்தில் அவர்கள் நடிப்பது இன்னும் அபூர்வமானது. ரஜினியின் பெயரில் சில படங்கள் தயாரானாலும் அந்தப் படங்களில் ரஜினி நடிக்கவில்லை. எம்ஜிஆர் பெயரில் சில படங்கள் தயாரானாலும் அதில் எம்ஜிஆர் நடிக்கவில்லை. விஜய் பெயரில் சில படங்கள் தயாரானாலும் அதில் விஜய் நடிக்கவில்லை.
கார்த்திக் பெயரில் 'மிஸ்டர் கார்த்திக்' என்ற படம் தயாரானது அதில் அவரே நாயகனாக நடித்தார். இதனை கலைவாணன் கண்ணதாசன் இயக்கினார். சரத்குமார், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்தனர். பி.எஸ்.நரசிம்மன் இசையமைத்திருந்தார். வரலட்சுமி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால் ஆக்சன் படமாக உருவாகி இருந்த போதும் பெரும் தோல்வியை சந்தித்தது.