உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கண்ணதாசனை கவலைப்பட வைத்த 'கவலை இல்லாத மனிதன்'

பிளாஷ்பேக் : கண்ணதாசனை கவலைப்பட வைத்த 'கவலை இல்லாத மனிதன்'


கவிஞராக மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்ணதாசன் ஒரு தயாரிப்பாளராக தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். அவரது பிரமாண்ட படமான 'சிவகங்கை சீமை' தோல்வியடைந்தது. அவர் தயாரித்த படங்களிலேயே 'மாலையிட்டை மங்கை' என்ற படம் தான் வெற்றி பெற்றது.

கண்ணதாசன் தயாரித்த தோல்வி படங்களில் ஒன்று 'கவலை இல்லாத மனிதன்'. 1960ல் வெளியான இப்படத்தை கே.சங்கர் இயக்க, கண்ணதாசன் கதை எழுதி தயாரிக்கவும் செய்தார். சந்திரபாபு கதையின் நாயகனாகவும், ராஜசுலோச்சனா கதை நாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, டி. ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம் மற்றும் எல்.விஜயலட்சுமி ஆகியோர் நடித்தனர். ஒரு பெரிய குடும்பத்தில் பொறுப்பில்லாத ஒருவன் இருந்தால் அதனால் அந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை. அந்த கவலை இல்லாத மனிதன் முத்துவாக சந்திரபாபு நடித்தார்.

இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சந்திரபாபு சீரியசாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. எம்.ஆர் ராதாவின் நடிப்பு மேம்போக்காக இருந்தது. தயாரிப்பாளர் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட சில பொருளாதார பிரச்சனைகளால் படம் தாமதமானது. போன்றவை தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. இது குறித்துப் பின்னாளில் தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறும்போது கவலையில்லாத மனிதன் தயாரான போது கவலையோடு இருந்த ஒரே மனிதன் நான்தான்” என்று குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !