உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா ஜோடி: முன்னணிக்கு முன்னேறும் கயாடு லோஹர்

சூர்யா ஜோடி: முன்னணிக்கு முன்னேறும் கயாடு லோஹர்


தமிழில் கடந்த வருடம் வெளிவந்த 'டிராகன்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதற்கு முன்பே கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்திருந்தார். தமிழில் அந்த ஒரு படத்தைத் தவிர வேறு படம் எதுவும் வரவில்லை. 'இதயம் முரளி' படம் ஜுலை 10ல் வெளியாக உள்ளது. இப்படம் தவிர 'இம்மார்ட்டல்' படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாரி செல்வராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகும் 'மஞ்சனத்தி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அடுத்து சூர்யாவின் 48வது படத்தின் கதாநாயகியாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இடையில் சில மலையாளப் படங்களிலும் நடித்து தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார் கயாடு. தமிழ் சினிமாவில் இளம் நடிகையருக்கான பஞ்சம் உள்ளது. வந்த வேகத்திலேயே சிலர் காணாமல் போய்விடுகிறார்கள். ஒரு சிலருக்குத்தான் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வருகிறது.

'மஞ்சனத்தி, சூர்யா 48' என இரண்டு முக்கியமான படங்கள் மூலம் தற்போது முன்னணி நடிகை என்பதை நோக்கி முன்னேறி வருகிறார் கயாடு லோஹர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !