உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே படத்தில் சிவாஜியை காதலித்த 4 நாயகிகள்

பிளாஷ்பேக்: ஒரே படத்தில் சிவாஜியை காதலித்த 4 நாயகிகள்


எழுத்தாளர் அகிலன் கல்கியில் எழுதிய 'பாவை விளக்கு' தொடர் கதை அதே பெயரில் சினிமா ஆனது. இந்த தொடர் முடிவதற்கு முன்பே இதன் உரிமத்தை பெற்ற ஏ.பி.நாகராஜன் திரைக்கதை வசனத்தை எழுதினார். கே.சோமு இயக்கினார்.

படத்தின் நாயகன் சிவாஜி ஒரு பிரபல எழுத்தாளர். அவரை நான்கு பெண்கள் காதலிப்பதுதான் படத்தின் கதை. அவர்கள் சிவாஜியை காதலிப்பதற்கான காரணம்தான் திரைக்கதை. பண்டரிபாய் சிவாஜியை ஒரு தலையாய் காதலிப்பார் அது தோல்வி அடைந்து விடும். தாசி குலத்தில் பிறந்த குமாரி கமலா காதலிப்பார், சிவாஜியும் அவரை காதலிப்பார் என்றாலும் அது தோல்வியில் முடியும், முறைப்பெண்ணான சவுகார் ஜானகியும் காதலிப்பார், அவரது வாசகியான எம்.என்.ராஜமும் காதலிப்பார்.

படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். 'காவியமா, நெஞ்சில் ஓவியமா?','ஆயிரம் கண் போதாது', 'மயங்கியதோர் நிலவிலே', 'நான் உன்னை நினைக்காத', 'நீ சிரித்தால்', 'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி', 'வெட்கமா இருக்குது', 'சிதறிய சலங்கைகள் போல' ஆகிய பாடல்கள் பெரிய வெற்றி பெற்றது. என்றாலும் படம் வெற்றிபெறவில்லை. ஒருவரை நான்கு பெண்கள் வலிந்து காதலிப்பதை அன்றைய ரசிகர்கள் ஏற்காததே தோல்விக்கு காரணம் என்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !