உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கட்டா குஸ்தி 2' குழுவிற்கு ஜாக்பாட் : தங்கம், வெள்ளி கார் பரிசு

‛கட்டா குஸ்தி 2' குழுவிற்கு ஜாக்பாட் : தங்கம், வெள்ளி கார் பரிசு

கட்டா குஸ்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி கூட்டணியில் வெளியாகி உள்ள படம் ‛கட்டா குஸ்தி 2'. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்களில் 25 கோடி வசூலை கடந்துள்ளது. படத்தின் வெற்றியால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்க நகையும், ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு 70 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சொகுசு காரும், நாயகி உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 40 கிராம் வெள்ளி நாணயத்தையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கினார்.

நேற்றுமுன்தினம் தான் தாய் கிழவி படத்தின் 100வது நாளில் இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு விலை உயர்ந்த எலக்ட்ரிக் காரை பரிசாக தந்தார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !