என் வாழ்வில் மிக துயரமான நாள் : பி சுசீலா உருக்கம்
ADDED : 5 hours ago
மறைந்த பின்னணி பாடகி எஸ் ஜானகி மறைவுக்கு, பிரபல மூத்த பாடகியான பி சுசீலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், என் வாழ்க்கையில் இது ஒரு மிக ஆழமான துயரமான நாள். இசைத்துறையில் ஒரு புகழ்பெற்ற சக கலைஞர் என்பதைத் தாண்டி, என்னுடைய உண்மையான தோழியையும், சகோதரியையுமானஎஸ். ஜானகியை இழந்துவிட்டேன்.
இசைத்துறையில் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களை (50 ஆண்டுகள்) ஒன்றாகக் கழித்த நாங்கள், பல மொழிகளில் எண்ணற்ற மெல்லிசைப் பாடல்களையும், அழகான, வாழ்நாள் முழுவதுமான ஒரு பந்தத்தையும் பகிர்ந்து கொண்டோம். அவருடைய பிரிவு இசை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. என் அன்பிற்குரிய ஜானகி, நீ லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வாய் என தெரிவித்துள்ளார்.