உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் ; ஜானகியின் உயிரைக் காப்பாற்றிய டாக்ஸி ஓட்டுநர்

பிளாஷ்பேக் ; ஜானகியின் உயிரைக் காப்பாற்றிய டாக்ஸி ஓட்டுநர்


தென்னிந்திய சினிமாவின் 'நைட்டிங்கேல்' எனப் பெருமை பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி நேற்று முன்தினம் (ஜூலை 11) காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருவதுடன், அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே வயோதிகம் காரணமாக படங்களில் பின்னணி பாடுவதிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஜானகி.

குறிப்பாக 90களின் இறுதியில், ஒருமுறை மருத்துவர் ஒருவரிடம் பென்சிலின் ஊசி போட்டுக்கொண்டார் ஜானகி. ஆனால், அந்த மருந்து அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, அதனால் சுவாசப்பாதை அடைபட்டு, மூச்சு விடுவதிலேயே சிக்கல் ஏற்படும் சூழலுக்கு அவரைத் தள்ளியது. இதனால் அவர் சுயநினைவை இழந்தார். அந்த இக்கட்டான சூழலில், அங்கிருந்த ஒரு மலையாளி டாக்ஸி ஓட்டுநர் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, தனது காரில் ஜானகியை ஏற்றிக்கொண்டு நெரிசல் மிகுந்த சாலைகளிலும் மிக வேகத்துடன் காரை ஓட்டிச் சென்று, மிகக் குறுகிய காலத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.

அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு ஜானகி அப்போது குணமடைந்தார். இந்த சம்பவம் குறித்துப் பின்னாளில் நினைவுகூர்ந்த ஜானகி, அந்தத் தெய்வத்திற்கு இணையான மனிதர் இல்லை என்றால் நான் மீண்டும் கண் விழித்திருக்க மாட்டேன் என்று உருக்கத்துடன் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !