உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அறுவை சிகிச்சையையும் மீறி ஆக்சனில் ரிஸ்க் எடுக்கும் பிரித்விராஜ்

அறுவை சிகிச்சையையும் மீறி ஆக்சனில் ரிஸ்க் எடுக்கும் பிரித்விராஜ்


மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆக்ஷன், குடும்ப கதையம்சம் என எல்லாவிதப் படங்களிலும் நடிக்கத் தயக்கம் காட்டாதவர். சமீபத்தில் அவரது நடிப்பில் 'ஐ நோ படி' என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கால் மணி நேர இடைவெளியில் தொடர்ந்து சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிகவும் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கடந்த 2023ல் ஒரு படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சி ஒன்றில் நடித்த பிரித்விராஜிற்கு அப்போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அவரது இடது முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டு, அதற்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் காரணமாக தற்போது அவரது இடது காலில் 3 டைட்டானியம் ஸ்குருக்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு பக்கம் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க அதிக ஆர்வம் இருந்தாலும், இப்படி எதிர்பாராத காயம் ஏற்பட்டால் படப்பிடிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படும், ஆதலால் தயாரிப்பாளருக்கு நஷ்டமாகும் என்பதாலேயே ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது கொஞ்சம் கவனத்துடனேயே நடிப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த 'ஐ நோ படி' படத்தைப் பார்க்கும்போது, அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையும் மீறி அவர் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !