பிளாஷ்பேக்: வடிவேலுக்கு முன்னால் வந்த சின்ன முருகன்
முருகன் என்றாலும், வடிவேலு என்றாலும் ஒரே பெயர்தான். ஆனால் காமெடி நடிகராக வடிவேலு 'ராசாவின் மனசிலே' படத்தில் நடிப்பதற்கு முன்பு அவரது சாயலில், அவரைப்போன்ற பாடிலாங்குவேஜோடு நடித்தவர் சின்ன முருகன் என்ற நடிகர்.
சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த சின்ன முருகன், கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார். 'இமைகள், நான் பாடும் பாடல், நான் சூட்டிய மலர், சிவப்பு நிலா, கண்ணைத் தொறக்கணும் சாமி, மனைவி ரெடி, அஞ்சாத சிங்கம், கதை கதையாம் காரணமாம், ஒருவர் வாழும் ஆலயம், கடற்கரை தாகம், தணியாத தாகம், மணந்தால் மகாதேவன், காவலுக்குக் கெட்டிக்காரன், நீங்களும் ஹீரோ தான், உதயகீதம்' போன்றவை சின்ன முருகன் நடித்த சில முக்கியமான படங்கள்.
வடிவேலுவின் அசுர வளர்ச்சிக்கு பிறகு சின்ன முருகனுக்கு வாய்ப்புகள் குறைந்ததால் அவர் சினிமாவை விட்டே விலகிச் சென்றார். அதற்கு பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.