உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அருள்வான்' உண்மை கதை

'அருள்வான்' உண்மை கதை

அருள்நிதி நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம் 'அருள்வான்'. தேன், தகராறு படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன் இயக்கி உள்ளார். ஆரவ், ரம்யா பாண்டியன், விடிவி.கணேஷ், பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலருடன் கிருத்திகா என்ற குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளார், மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கூறியிருப்பதாவது: இது ஒரு உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்ட படம். மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிக்கே போராடிக் கொண்டிருக்கும்போது கல்வி எப்படி அவர்களுக்கு சாத்தியப்படும். என்றாலும் அந்த மக்களோடு பிறந்த ஒரு சிறுமி கல்விக்காக போராடுகிறாள். எப்படியோ அவள் மாவட்ட ஆட்சித்தலைவர் அருள்நிதியை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவிக்கிறாள். அதன்பிறகு கலெக்டர் அருள்நிதி அந்த பெண்ணுக்கு என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

சிறுமியின் தந்தையாக ஆரவும், தாயாக ரம்யா பாண்டியனும் நடித்திருக்கிறார்கள். ஆரவ் இதுவரை பார்த்திராத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர்தான் இரண்டாம் நாயகன், ரம்யா பாண்டியன் மலைவாழ் பெண்ணாகவே மாறி நடித்திருக்கிறார். 'கல்விதான் எல்லாவற்றுக்குமான விடுதலை' என்பதை அழுத்தமாக சொல்லும் படம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !