9 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்குகிறார் சுசி கணேசன்
ADDED : 1 days ago
'பைவ் ஸ்டா'ர் படத்தின் மூலம் இயக்குனரானவர் சுசி கணேசன். அதன்பிறகு விரும்புகிறேன், திருட்டுபயலே, கந்தசாமி, உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவர் தனது 'திருட்டுபயலே' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார். பின்னர் தமிழ் சினிமாவிற்கு திரும்பி வந்து 'திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்தை' இயக்கினார். பிறகு இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார்.
ஹிந்தி படங்கள் அவர் எதிர்பார்த்த மாதிரி அமையாததால் தற்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். 2017ம் ஆண்டு திருட்டுப்பயலே 2ம் பாகத்தை இயக்கினார். தற்போது 'ஒரண்ட' என்ற படத்தை இயக்கி வருகிறார். 85 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.