உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் மனைவி இந்து அல்ல: 'லவ் ஜிகாத்' விமர்சனத்திற்கு அமீர்கான் விளக்கம்

என் மனைவி இந்து அல்ல: 'லவ் ஜிகாத்' விமர்சனத்திற்கு அமீர்கான் விளக்கம்


பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், ஏற்கனவே 2 திருமணம் செய்து, விவாகரத்து பெற்று, சமீபத்தில் அழகுக் கலை நிபுணரான கவுரி ஸ்ப்ராட் (வயது 47) என்பவரை மூன்றாவதாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இஸ்லாமியரான அமீர்கான் மணந்த 3 பெண்களுமே இந்துக்கள். அவர் வேண்டுமென்றே அவ்வாறு செய்வதாக கூறி, இந்தத் திருமணத்திற்கு பா.ஜ., மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் அயோத்தி தபஸ்வி சாவனியின் தலைவரான பரம்ஹன்ஸ் ஆச்சார்யா, அமீர்கான், 'லவ் ஜிகாத்'தை ஊக்குவிப்பதற்காகவே இந்து பெண்களைத் திருமணம் செய்கிறார் என குற்றம் சாட்டியிருந்தார். அமீர்கான் 'லவ் ஜிகாத்'தை ஆதரிப்பதாகவும், அதற்காகவே 3 இந்து பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் பரவும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமீர்கான், விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், 'எனது மனைவிகள் ரீனா, கிரண் மற்றும் தற்போதைய மனைவி கவுரி என யாருமே மதம் மாறவில்லை. நாங்கள் பதிவு திருமணம் மட்டுமே செய்துகொண்டோம். என் மனைவி கவுரி, கிறிஸ்தவராக இருந்தாலும், அந்த மதத்தை பின்பற்றவதில்லை. எனது குடும்பம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கியது. என் சகோதரிகள் மற்றும் மகள் இந்துக்களை திருமணம் செய்துள்ளனர். என் உறவினர் மன்சூர் ஒரு கிறிஸ்தவரைத் திருமணம் செய்துள்ளார். கவுரி இந்துவே அல்ல, அவர் ஒரு கிறிஸ்தவர்; அதிலும் தீவிரமாக மதத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர் கூட அல்ல. 'லவ் ஜிகாத்' என்ற விமர்சனம் நகைப்புக்குரியது'' என விளக்கமளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !