உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் இந்த வாரம் 8 ரிலீஸ், ஒன்றும் தேறவில்லை ?

தெலுங்கில் இந்த வாரம் 8 ரிலீஸ், ஒன்றும் தேறவில்லை ?

தமிழ் சினிமாவை விட தெலுங்கில் கொஞ்சம் குறைவான படங்கள் தான் வாரா வாரம் வெளியாகும். இங்கு வாரத்திற்கு நான்கைந்து படங்கள் தவறாமல் வந்து விடுகிறது. தெலுங்கில் ஓரிரு படங்கள்தான் வரும், சில வாரங்களில் அது கூட இருக்காது. இத்தனைக்கும் தமிழகத்தை விட தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா இரண்டையும் சேர்த்தால் அங்கு தியேட்டர்கள் மிக அதிகம்.

தெலுங்கில் கடந்த ஜூன் மாதம் வெளியான 'மா இன்ட்டி பங்காரம்' 100 கோடி வசூலையும், கடந்த வாரம் வெளியான 'லெனின்' படம் 70 கோடி வசூலையும் கடந்து சமீபத்திய வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்த வாரம் அதாவது நேற்று ஒரே நாளில் 8 படங்கள் வெளியாகி ஆச்சரியப்படுத்தி உள்ளன. “மிஸ்டர் மிடில் கிளாஸ், எம்ஆர்பி (நீக்கென்தா நாக்கென்தா), ஓ சுகுமாரி, ஒக கோர்ட் கேஸ், ஆபரேஷன் அருணா ரெட்டி, ராஜா தி ராஜா, வடாலா, வெங்கட்ராமையா காரி தலுகா” ஆகியவைதான் அந்த எட்டுப் படங்கள். இவற்றில் ஒன்று கூட தேறவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !