உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாரணாசி 'மந்தாகினி'யின் சிரிப்பும், நெருப்பும்...

வாரணாசி 'மந்தாகினி'யின் சிரிப்பும், நெருப்பும்...

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் 'தமிழன்' படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குப் படமான 'வாரணாசி' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்திற்கு வருகிறார்.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் இப்படத்திற்காக இதுவரையில் மகேஷ் பாபு போஸ்டர்களை மட்டுமே படக்குழு வெளியிட்டிருந்தது.

இன்று பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் என்பதால் அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். படத்தின் இயக்குனர் ராஜமவுலி, “புன்னகைக்கும் போது அழகு….. புன்னகை செய்யாத போது நெருப்பு”, மந்தாகினி ஆக பிரியங்கா சோப்ரா,” எனப் பதிவு செய்து சிரிப்பும், நெருப்புமான பிரியங்காவின் புகைப்படங்களையும் சேர்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !