பாலிவுட் நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை
பிரபல பாலிவுட் நடிகை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷெபாலி பாஹா. பத்திரிகையாளராக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனார். இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் அடைந்தார், சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
மகாதேவ் பந்தைய செயலி மூலம் நடந்த 6 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மகாதேவ் பந்தய செயலி மூலம் 6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மகாதேவ் செயலியின் முக்கிய அமைப்பாளர் சவுரப் சந்திரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஷபாலி பாகாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
ஏற்கெனவே ஷபாலி பாகாவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது அங்கிருந்து 30 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் நேற்று விசாரணை நடத்தியது.