உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகுடம் பற்றி மனம் திறந்த விஷால்

மகுடம் பற்றி மனம் திறந்த விஷால்

விஷால் முதன் முதலாக இயக்குனராகி இருக்கும் படம் 'மகுடம்', அவரே இயக்கி, நடித்து தயாரிக்கிறார். அவருடன் அஞ்சலி, துஷரா விஜயன், ஜான் விஜய், வம்சி கிருஷ்ணா, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஷால் மூன்று கெட்அப்பில் நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இதற்கு முன்பும் பல படங்களை கோஸ்ட் டைரக்டராக இயக்கி இருக்கிறேன். அந்த படங்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. என்றாலும் முறைப்படி டைட்டில் கார்டில் பெயர் வரும் முதல் படம் மகுடம். நான் இயக்குனர் கனவோடுதான் சினிமாவிற்கு வந்தேன். பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றினேன். விஜய்க்கு மட்டுமே பல கதைகள் வைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகனாகி விட்டேன்.

ஆனாலும் எனக்குள் இருந்த இயக்குநர் கனவு இப்போ 'மகுடம்' மூலம் நனவாகி விட்டது. இந்த படத்தில் மூன்று தோற்றங்களில் நடித்துள்ளேன். ஒருத்தர், மெடிக்கல் ரெப்பா வர்ற மிடில் கிளாஸ் குடும்பஸ்தன். இன்னொருத்தர், கேங்க்ஸ்டர். மூணாவது ஆளு, தீவிரமான இளையராஜா ரசிகர். இப்படி மூணு ரோலுமே தனித்துவமாக இருக்கும். ஹீரோவா, கேமராவுக்கு முன்னாடியும் இருந்தாகணும். டைரக்டரா, கேமராவுக்குப் பின்னாடியும் இருந்தாகணும். பொறுப்புகள் அதிகம் இருந்துச்சு. அப்பப்போ திரைக்கதை, வசனங்கள்ல சின்னச் சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். எடுத்து முடித்த காட்சிகளை அன்னிக்கே எடிட்டிங் செய்யும் வேலையும் வந்துவிடும். இப்படிப் ஒரு வருஷம் நேரம் காலம் பாக்காம உழைச்சிருக்கேன்.

படத்தின் கடைசி பத்து நிமிட கிளைமாக்ஸ், பரபரன்னு இருக்கும். ஒரு மாஸ் கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் மகுடத்தில் இருக்கு. 1960, 1990, 2025-னு மூணு காலகட்டத்துல நடக்கும் கதை. அமைதி தவழும் சாந்தமான ஒரு உலகமும், ஒரு கேங்ஸ்டர் உலகமும் நேருக்கு நேர் மோதினால் என்னவாகும், அந்தப் போரில் யார் ஜெயிக்குறாங்க, யாருக்கு மகுடம் சூட்டுறாங்கங்கிறதுதான் படத்தின் கதை. என்கிறார் விஷால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !