உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீடு திரும்புங்கள் ; போராட்ட மாணவர்களுக்கு சல்மான் கான் கோரிக்கை

வீடு திரும்புங்கள் ; போராட்ட மாணவர்களுக்கு சல்மான் கான் கோரிக்கை

கடந்த சில நாட்களாகவே டில்லியில் நீட் தேர்வுத்தாள் லீக்கான விவகாரத்தில் அதற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. போலீசார் இந்த போராட்டத்தை பல்வேறு முறையில் அடக்கி கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த போராட்டத்திற்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர். நடிகர் சல்மான்கான் கூட மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். அதே சமயம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கான், பிரதமர் மீது நம்பிக்கை வைத்து மாணவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டும். மாணவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்ப வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த போராட்டத்தை உண்ணாவிரதத்துடன் துவங்கிய சோனம் வாங்சு என்பவரிடமும், “சோனம் இது முடிந்துவிட்டது நண்பா.. இதை நீட்டிக்க வேண்டாம். ஏதாவது தேவைப்பட்டால் வீட்டில் இருந்து உணவு அனுப்புகிறேன். சாப்பிடுங்கள்” என்று அன்பான கோரிக்கை வைத்து அவரையும் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். சோனம் வாங்சு போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டார். அதேசமயம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை கைவிடாமல் தொடருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !