உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாரா ரோஹித் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!

நாரா ரோஹித் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!

தெலுங்கில் நாரா ரோஹித் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் சவுண்ட் இன்ஜினியர். இன்று அவரது பிறந்த நாளையொட்டி இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு ஜாலியான வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. சினிமில்லி மணி குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் நயன் சரிகா மற்றும் நரேஷ் விஜய கிருஷ்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கரண் சி புரொடக்ஷன்ஸ் சார்பில் பரத் சவுத்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு வீடியோவில், நகைச்சுவை நடிகர் சுதர்ஷனின் கலக்கலான குரல் பதிவு இடம் பெற்றுள்ளது. மேலும், இதில் கதாநாயகனாக நடிக்கும் நாரா ரோஹித்திற்குக் காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோவைப் பார்க்கும்போது, இப்படம் நகைச்சுவை மற்றும் ஜாலியான தருணங்கள் நிறைந்த ஒரு முழுநீள என்டர்டெய்னராக இருக்கும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !