உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தில் விஜிலென்ஸ் கமாண்டோவாக இணைந்த நிவின்பாலி

லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தில் விஜிலென்ஸ் கமாண்டோவாக இணைந்த நிவின்பாலி


கேரளாவில் அரசு துறைகளிலும் மற்றும் பொதுவாழ்விலும் லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பதற்கும், இளைஞர்களை இதற்கு எதிராகத் திருப்புவதற்கும் கேரளா மாநில லஞ்ச ஒழிப்புத்துறை 'ப்ராஜெக்ட் ஜீரோ - விஜிலன்ஸ் விசில்' என்கிற ஒரு புதிய விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் தூதுவராக, மாநிலத்தின் முதல் விஜிலன்ஸ் கமாண்டோவாக நடிகர் நிவின்பாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் லயோலா பள்ளியில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மாநில உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் நடிகர் நிவின்பாலி கலந்துகொண்டு லஞ்சம், மற்றும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார். அதன் பின் அவர் பேசும்போது, லஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவது மட்டுமல்ல, அதன் மூலம் ஒரு தகுதியான மாணவனின் வாய்ப்பைப் பறிப்பதும், குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதும் கூட ஊழல் தான். நேர்மையான வழியில் செல்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும் சூழல் உருவாக வேண்டும் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !