உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காரைக்குடியில் தொடங்கிய மம்முட்டியின் மலையாள படப்பிடிப்பு

காரைக்குடியில் தொடங்கிய மம்முட்டியின் மலையாள படப்பிடிப்பு


நடிகர் மம்முட்டி மலையாளத்தில் பிஸியாக நடித்து வந்தாலும், பெரும்பாலான அவரது படப்பிடிப்புகள் அடிக்கடி சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நடிகர் தனுசுடன் இணைந்து 'ஓம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. இதனைத் தொடர்ந்து, மலையாளத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரியில் ஜீவா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை இயக்கிய இயக்குனர் நிதீஷ் சகாதேவ் தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படப்பிடிப்பு தொடங்கியதை அறிவிக்கும் விதமாக படக்குழுவினர் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானின் பிறந்தநாளன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !