மாதவனின் 'ஜிடிஎன்' படத்தில் ஆறு நாயகிகள்
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன் நடித்த 'ஜிடிஎன்' படம் நாளை ரிலீஸ் ஆகிறது. 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்பட்ட ஜி.டி.வாழ்க்கையே இந்த படக்கதை, ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்து இருக்கிறார். படத்தில் ஷீலா, ப்ரியாமணி, துஷாரா விஜயனும், பிரிகிடா, அதிதிபாலன், கனிகா என 6 ஹீரோயின்கள் இருக்கிறார்கள்.
ஆனால் கதைப்படி இவர்கள் அனைவரும் மாதவனுக்கு ஜோடி இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது. ஜி.டி.நாயுடு முதல் மனைவியாக ப்ரியாமணியும், 2வது மனைவியாக துஷாராவும் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமே மாதவனுக்கு ஜோடி. சின்ன வயது ஜி.டி.நாயுடுவாக டி.ஜே.அருணாசலம் வருகிறார். அவர் ஜோடியாக ஷீலா நடித்துள்ளார். அதாவது, மாதவனின் சின்ன வயது கேரக்டருக்கு ஜோடி. அவர் கிராமத்தில் வாழும் பெண்ணாக பிரிகிடா வருகிறார். அரசு அதிகாரியான ஜெயராம் ஜோடியாக கனிகாவும், ஜி.டி.நாயுடு யார் தெரியுமா என்று இன்றைய தலைமுறைக்கு சொல்லும் கேரக்டரில் அதிதிபாலன் வருகிறார்.
ஆக, மற்ற நான்கு பேரும் மாதவனுக்கு ஜோடி இல்லை என தெளிவுப்படுத்தி உள்ளது. இந்த படத்தில் நிஜ ஜி.டி.நாயுடு சம்பந்தப்பட்ட பொருட்கள், போட்டோக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு ஜி.டி.நாயுடு குடும்பத்தினரே உதவி இருக்கிறார்கள்.