'அவஞ்சர்ஸ் எண்ட் கேம்' சாதனை முறியடிப்பு, இயக்குனர்கள் வாழ்த்து
டெஸ்டின் டேனியர் கிரெட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலந்த் நாயகனாக நடிக்க 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது. தொடர்ந்து வசூலில் இப்படம் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.
உலக அளவில் மொத்தமாக, ஒரு பில்லியனுக்கும் அதிகமான வசூலைக் குவித்துவிட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் முதல் வார இறுதியில் இப்படம் 360 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்றது. இது 2019ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின் சாதனை வசூலான 357 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை விட அதிகம்.
இதையடுத்து 'அவஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தின் இயக்குனர்களாக ருசோ பிரதர்ஸ் அவர்களது இன்ஸ்டா தளத்தில் 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' படத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அவர்களது வாழ்த்தில்,
“உள்நாட்டு வசூல் தொடக்க வார இறுதியில் வரலாறு படைத்ததற்காக, டெஸ்டின், டாம், ஜெண்டாயா, ஜேக்கப், ஜான், மார்க், சேடி, ப்ளோரன்ஸ், மைக்கேல், மரிசா, தயாரிப்பாளர்களான கெவின், ஆமி, ஆவி மற்றும் ரேச்சல் ஆகியோருக்கும், 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். சவால் அடுத்தவருக்குக் கைமாறியுள்ளது...'” என்று குறிப்பிட்டுள்ளனர்.