உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யஷின் 'டாக்சிக்' படத்தின் ஆங்கில டிரைலர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!

யஷின் 'டாக்சிக்' படத்தின் ஆங்கில டிரைலர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!


கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடித்துள்ள 'டாக்சிக்' வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படக்குழுவினர் ஏற்கனவே ஐந்து இந்திய மொழிகளில் டிரைலரை வெளியிட்டிருந்தனர். அதற்கு அபாரமான வரவேற்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று இரவு 8:30 மணிக்கு ஆங்கில டிரைலர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் ஒரு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டு, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஆங்கில டிரைலர் மூலம் படத்தின் விளம்பரங்களை உலகளவிலான சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. மேல்நாட்டு பார்வையாளர்களை இந்த டிரைலர் எந்தளவிற்கு ஈர்க்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கே.வி.என் புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'டாக்சிக்' படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுடாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !