'வாரணாசி' படத்தின் பாடல்கள் எண்ணிக்கையை வெளியிட்ட எம்.எம். கீரவாணி!
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் 'வாரணாசி' படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கீரவாணி, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் இந்த வாரணாசி படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்திற்கான பின்னணி இசை அமைக்கும் பணிகளை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன், பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வருகிறது.