உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து ஏழு படங்களை அறிவித்த மோகன்லால்

அடுத்தடுத்து ஏழு படங்களை அறிவித்த மோகன்லால்

நடிகர் மோகன்லாலை பொறுத்தவரை வருடத்திற்கு குறைந்தது ஐந்து படங்களிலாவது நடித்துவிடுவார். அவர் கதாநாயகனாக நடித்த 'திரிஷ்யம் 3', மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'பேட்ரியாட்' மற்றும் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'தொடக்கம்' ஆகிய மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. நாளை (ஆக-20) அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'கபா' திரைப்படம் வெளியாகிறது. அதுமட்டுமல்லாமல், ஹிந்தியில் 'ஹைவான்', தமிழில் 'ஜெயிலர் 2' ஆகிய படங்களிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் மோகன்லால். கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தொடரும்' படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தியுடன் மீண்டும் இணைந்து 'அதிமனோகரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாளத்தில் தான் அடுத்து நடிக்க உள்ள ஏழு படங்களின் புதிய அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் மோகன்லால். அந்த வகையில், பிரியதர்ஷன் இயக்கத்தில் அவரது நூறாவது படமாக உருவாக இருக்கும் படம், பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஒரு படம், அவரது மகன் அனூப் சத்யன் இயக்கத்திலும், சமீபத்தில் மோகன்லாலின் மகளை வைத்து இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். மேலும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனரும் நடிகருமான திலீஷ் போத்தன் இயக்கத்திலும், 'மேப்படியான்' படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !