யஷை தொடர்ந்து சைப் அலிகானுக்கு ஜோடியாகும் கியாரா அத்வானி!
ADDED : 6 hours ago
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள 'டாக்சிக்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இந்த படத்தில் யஷூடன் மிக நெருக்கமாக அவர் நடித்துள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்டு 26ம் தேதி இப்படம் உலகம் முழுக்க வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த டாக்சிக் படத்தை அடுத்து ஹிந்தியில் சைப் அலிகானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் கியாரா அத்வானி. இவர்கள் முதன் முறையாக ஜோடி சேரும் இந்த படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையில் உருவாகிறது. பிரபல எழுத்தாளர் கனிகா தில்லான் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கவுள்ளது.