உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற திலீப் - மஞ்சு வாரியர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்ற திலீப் - மஞ்சு வாரியர்

மலையாளத்தில் பிரபல விநியோகஸ்தரான லிஸ்டின் ஸ்டீபன், கொச்சியில் உள்ள காக்கநாட்டில் தற்போது 'மேஜிக் பிரேம்ஸ்' என்கிற பெயரில் புதிய திரையரங்க வளாகத்தைக் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. கேரள முதல்வர் விடி சதீசன் இந்த திரையரங்க வளாகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மலையாளத் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அந்த வகையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் திலீப்பும், அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒரே வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தாலும் கூட, இருவருக்கும் இடையில் இன்னும் சில பிரபலங்கள் அமர்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், இப்படி ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !