உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடடா... இவ்வளவு அறிவிப்புகளா? உற்சாகத்தில் தமிழ் சினிமா

அடடா... இவ்வளவு அறிவிப்புகளா? உற்சாகத்தில் தமிழ் சினிமா


நேற்றும் இன்றும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி, பல நிகழ்ச்சிகள் நடந்து தமிழ் சினிமாவுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் நேற்று காலை ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினர். அந்த செய்தி வெளியானது. அதை தொடர்ந்து மம்முட்டி 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 'ஓம்' படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து சொன்னது.

சில மணிநேரத்தில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நிவின் பாலி நடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் 250 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயாடு லோகர், பிரியங்கோ மோகன் நடிக்கும் 'மஞ்சணத்தி' படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா. மணிசேயோன் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதுப்படமான 'கிங் அண்ட் குயின்ஸ்' பூஜை நேற்று நடந்தது. அதில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

நேற்று மாலை மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் படத்தின் தலைப்பு 'இஞ்சி வெல்லம்' என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிவராஜ்குமார், 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் தலைப்பு 'பிக்காசோ' என அறிவிப்பு வெளியானது. சூர்யா நடித்த 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' 260 கோடி வசூலித்ததாக போஸ்டர் வெளியானது.

கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'அப்பாகுட்டி' விரைவில் ரிலீஸ் என்ற போஸ்டர் வெளியானது. 'எக்ஸ் ஒய்' படத்தின் அடுத்த பாடல் வெளியானது. முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' படத்தின் அடுத்த பாடல் வெளியீடு அறிவிப்பு வந்தது. இது தவிர ஆர்யா ரிலீஸ் செய்யும் 'கோல்டுகால்' பட டிரைலர் அறிவிப்பு, 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தில் கெனிஷா இசையமைப்பாளர் ஆவது குறித்த அறிவிப்பும் வந்தது.

பாரதிராஜா நடிக்கும் 'புலவர்' பட போஸ்டர் ரிலீஸ் ஆனது. இன்று அசோக்செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் 'அன்பில் அவன்' படம் செப்டம்பர் 25ல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது. இப்படிப்பட்ட அறிவிப்புகளால் நேற்றும் இன்றும் கோலிவுட்டில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !