உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தம்பியை கலாய்த்தார், சிவாஜியை புகழ்ந்தார் இளையராஜா

தம்பியை கலாய்த்தார், சிவாஜியை புகழ்ந்தார் இளையராஜா


'லெனின் பாண்டியன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் அவரது தம்பி கங்கை அமரன் கதைநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ரோஜா. சிவாஜிகணேசன் பேரனும், ராம்குமார் மகனுமான தர்ஷன் ஹீரோ. சென்னையில் நடந்த இந்த படவிழாவில் கலந்துகொண்டு இளையராஜா பேசுகையில், சிவாஜிகணேசனை அவரின் நேரந்தவறாமையை புகழ்ந்து பேசினார்.

தனது தம்பி கங்கை அமரன் குறித்து பேசுகையில், அவன் நிஜ வாழ்க்கையிலும் நல்லா நடிப்பான், என் கிட்டேயே நடிப்பான் என கலாய்த்தார். கங்கை அமரன் மகனும், இயக்குனருமான வெங்கட்பிரபு பேசுகையில் ''என் அப்பா நடிக்கும்போது ஓவர் ஆக்ட் பண்ணுவாரு. ஆனால், இந்த படத்துல நல்லா நடிச்சு இருக்கிறாரு. அவர் கிட்ட வேலை வாங்குவது கஷ்டம். இந்த பட இயக்குனர் பாலா சிறப்பாக அதை செய்து இருக்கிறாரு. எங்க அப்பாவை இந்த மாதிரி பார்த்ததே இல்லை. படம் தொடங்கி கொஞ்ச நேரத்துலயே 'துரைராசு' கேரக்டராதான் அவர் தெரியுறாரே தவிர, அந்த இடத்துல கங்கை அமரன் தெரியவே மாட்டாரு. விஜய் சாரையும் - அஜித் சாரையும் சேர்த்து நான் நிறைய முறை பார்த்திருக்கேன்.

இந்த விழாவில் கண்டிப்பா கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் லண்டன் போகாம இங்கேயே இருந்துட்டேன். ஒரு ரசிகனா எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அவங்க இரண்டு பேருக்கும் இடையே பெரிய அளவில் ரசிகர்களின் போட்டிகள் இருந்தாலும், அவங்களுக்குள்ள ஒரு அழகான நட்பு இருக்கு.

இப்போ நம்ம முதல்வர் விஜய் அவர்கள் தொழிலதிபர் சந்திப்பிற்காக லண்டன் சென்றிருந்தாலும், சரியான நேரத்தில் அங்கு சென்று அஜித்தின் பந்தயத்தைப் பச்சைக் கொடி அசைத்துத் தொடங்கி வைப்பதை ஒரு நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையாகவே நான் பார்க்கிறேன். தல மற்றும் தளபதி ரெண்டு பேரை நினைச்சும் எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு!' என்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !