சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் ‛மண்டவெட்டி'
சூரி நடித்த மண்டாடி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மண்டவெட்டி என்ற படம் வருகிறது. நடிகை கோமலி பிரசாத் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் நேச்சுரல் திரில்லர் படம் இது. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை. அமானுஷ்ய கிரைம் திரில்லர் பின்னணியில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் அறியப்படாத மர்மங்களை உள்ளடக்கியது.
கதையில் 'செஞ்சி சாமி' எனப்படும் மர்மமான சக்தி இடம் பெறுகிறது. சுற்றிலும் நிகழும் விசித்திரமான சம்பவங்களுடன் இந்த சக்திக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. செஞ்சி எனப்படும் சக்தி வாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை உருவாகி உள்ளதாக இயக்குனர் கூறுகிறார். பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் வேணு கோபால் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. படத்தின் தலைப்புக்கும், கதைக்கு என்ன சம்பந்தம் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது.