ஓய்வு குறித்த வதந்திகளுக்கு அமிதாப் பச்சன் முற்றுப்புள்ளி
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தனது வலைப்பதிவில், நேரமாகிவிட்டது, ஓய்வு பெற வேண்டிய நேரம் என்று பதிவிட்டதைத் தொடர்ந்து வதந்திகள் பரவத் தொடங்கின. அவர் திரையுலகில் இருந்து ஓய்வு பெற போவதையே இது உணர்த்துவதாக பலரும் புரிந்து கொண்டனர். இந்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அமிதாப் பச்சன், தனது கருத்தின் பின்னணியை தெளிவுபடுத்தியுள்ளார்.
வலைப்பதிவில், நேரமாகிவிட்டது, ஓய்வு பெற வேண்டிய நேரம் என்று பதிவிட்டது. அது தூங்கச் செல்வதைக் குறிக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதுதான் ஊடகம் - ஒரு தேசத்தின் மனசாட்சி - இறுதி தகவல் தருபவர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது சமீபத்திய வலைப்பதிவில், ஓய்வு என்பது வெறுமனே தான் தூங்கச் செல்வதைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது என்பதை அமிதாப்பச்சன் மீண்டும் விளக்கியுள்ளார். விரைவில் வேலையிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் தனக்கில்லை என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் அமிதாப்பச்சனுக்கு 83 வயதாகிறது.