தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/தனுசு

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

மாத ராசி பலன் : தனுசு
17 ஆக 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

தனுசு

தனுசு; மூலம்

உறுதியாக இருந்து வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். ஞானமோட்சக்காரகன் பாக்ய ஸ்தானத்திலும் யோகக்காரகன் சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள், பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் செப். 1 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவை விட செலவு அதிகரிக்கும். திட்டமிடாமல் சில வேலைகளை மேற்கொண்டு அதில் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். குடும்பத்தினர் விருப்பத்தையும், பிரியமானவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வதற்காக பொன் பொருள் என்று வாங்கி கையிருப்பு கரைய ஆரம்பிக்கும் என்றாலும், குடும்பத்தில் நிம்மதியான நிலையும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் விளைச்சலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டி வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: செப். 7, 8.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 25, 30. செப். 3, 12, 16.

பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.

பூராடம்
செல்வாக்கோடு வாழ வேண்டும் என்று வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வீண் செலவு அதிகரிக்கும். நெருக்கடிகள் ஏற்படும். செய்து வரும் வேளையிலும் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என்றாலும், குரு பகவானின் பார்வைகள் விரய, குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் வீண் செலவுகள் கட்டுப்படும். நிம்மதியான உறக்கம் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் ஆக. 31 வரை விரயங்களை ஏற்படுத்திட இருக்கிறார் என்பதால் வரவு செலவில் கவனமாக இருப்பது நன்மை தரும். வியாபாரிகள் புதிய முதலீட்டில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களுடைய சந்தோஷத்திற்காகவும் செல்வாக்கை நிலைநாட்டவும் சிலர் வீண் செலவுகளை செய்து நஷ்டத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்றாலும், செப். 1 முதல் நிலைமை சீராகும். வருமானம் அதிகரிக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கடன்களை அடைத்திடும் அளவிற்கு வருமானம் வரும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும் எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். ஞானமோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருளும் பெரியோர் ஆதரவும் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் குடும்ப ரகசியங்களை பேசாமல் இருப்பது நன்மை தரும். சிலருக்கு மாதத்தின் பிற்பகுதியில் சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப். 8, 9.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 24, 30. செப். 3, 6, 12, 15.

பரிகாரம்: பைரவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். ஆரோக்யம் சீராகும்.

உத்திராடம் 1 ம் பாதம்
உறுதியான மனம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் பாக்யாதிபதியும் ஆத்ம காரகனுமான சூரியன் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். பெரியோர் ஆதரவும் தெய்வ பலமும் கிடைக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்தவர்களுக்கு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றாக வாழும் நிலை உருவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும் என்றாலும், ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமும் கவனமும் இந்த நேரத்தில் அவசியம். உங்கள் செயல்களே உங்களுக்கு சங்கடத்தையும், சட்ட சிக்கல்களையும் உண்டாக்க வாய்ப்பிருப்பதால் நிதானமாக செயல்படுவது அவசியம். உங்கள் சப்தமாதிபதி புதனும் செப். 3 வரை மறதியையும், கவனக்குறைவையும் ஏற்படுத்திட வாய்ப்பிருப்பதால் உங்களுக்குள் குழப்பமும் தெளிவற்ற நிலையும் இருக்கும். அதனால் எடுக்கும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். ஆக. 31 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரமும் பொன் பொருள் இழப்பிற்கு காரணமாக இருப்பதால் பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இருக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 9.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 21, 28, 30. செப். 1, 3, 10, 12.

பரிகாரம்: அகோரமூர்த்தியை வழிபட உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். வேண்டுதல் நிறைவேறும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us