தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/மாத ராசி பலன்/மிதுனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

மாத ராசி பலன் : மிதுனம்
17 ஆக 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்

திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நினைத்ததை நடத்தி முடித்திடக்கூடிய நிலையும் உண்டாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மருத்துவம், காவல் துறைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சககாரகன் கேது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். ராசிநாதன் புதன் செப். 3 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த பணம்வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து கேட்ட உதவிகள் குறித்த நேரத்தில் வரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைத்திடக்கூடிய நிலை உருவாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் உங்களை நெருங்காமல் போகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நன்மை அளிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 25.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 23, 27. செப். 5, 9, 14.

பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

திருவாதிரை
உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். உங்களுக்கும் மேலானவர்களின் ஆதரவு இந்த மாதத்தில் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பொறுப்பும் தேடிவரும். யோகக் காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியாகும். மற்றவர்களால் முடித்திட முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண முடியும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயும் உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார். உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் அதிர்ஷ்டக் காரகனுமான சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். கையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார். வார்த்தைகளில் தெளிவினை வழங்குவார். எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயத்தில் கவனம் கூடும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 26.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 22, 23, 31. செப். 4, 5, 13, 14.

பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

புனர்பூசம் 1,2,3 ம் பாதம்
அறிவாளியான உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை இல்லாமல் செய்வார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உருவாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். நோய் நொடி வம்பு வழக்கு சங்கடம் பிரச்னைகள் என்றிருந்த நிலைகளை இல்லாமல் செய்வார். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்து வந்தவர்கள் காணாமல் போவர். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். உங்கள் செயல்களிலும் மாற்றம் ஏற்படும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் தைரியமாக உங்களை செயல்பட வைப்பார். அரசு வழி முயற்சிகள் ஆதாயம் தரும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பொன் பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். விவசாயத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வருமான உயரும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 27.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 23, 30, செப். 3, 5, 12, 14.

பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடக்கும்................

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us