உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அனிமல்' பட நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் மாதுரி தீட்சித்

'அனிமல்' பட நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் மாதுரி தீட்சித்


எண்பது மற்றும் 90களில் பாலிவுட் கனவுக்கனியாக வலம் வந்தவர் நடிகை மாதுரி தீட்சித். 2000க்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன இருந்தாலும் தற்போதும் செலக்ட்டிவான சில படங்களில் நடித்து வருகிறார் மாதுரி தீட்சித். அந்த வகையில் கடந்த 2024ல் வெளியான 'பூல் புலையா 3' படத்தில் நடித்த மாதுரி தீட்சித் தற்போது 'மா பெஹன்' என்கிற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக இரண்டு டீன் ஏஜ் பெண் குழந்தைகளுக்கு தாயாக இவர் நடிக்கிறார்.

இந்த படத்தில் இவரது மகளாக பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி நடிக்கிறார். இவர் கடந்த 2024ல் வெளியான 'அனிமல்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அடுத்து பிரபாஸ் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே பூல் புலையா படத்திலும் மாதுரி தீட்சித்துடன் இணைந்து நடித்த இவர், இந்த மா பெஹன் படத்திலும் அவருடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !