ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ்
கன்னடத்தில் 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தென்னிந்தியாவில் மட்டுமல்ல பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்த நடிகராக யஷ் மாறியுள்ளார். தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'டாக்ஸிக்' என்கிற பிரமாண்டமான படத்தில் நடித்துள்ளார் யஷ். இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இது ஒரு அதிரடி ஆக்சன் படமாக கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகியுள்ளது.
அதே சமயம் இந்த படம் குறித்து யஷ் கூறும்போது, “இது வழக்கமான ஒரு கேங்ஸ்டர் ட்ராமா அல்ல. இயக்குனர் கீத்து மோகன்தாஸ் இதை முற்றிலும் சைக்காலஜிக்கல் முறையில் அணுகி உருவாக்கியுள்ளார். இந்த படம் படப்பிடிப்பின் போது ஆங்கிலத்திலும் படமாக்கப்பட்டது. அந்த அனுபவமே வித்தியாசமாக இருந்தது. அந்த வகையில் என்னுடைய நடிப்பில் ஆங்கிலத்திலும் வெளியாகும் முதல் படம் இதுதான்” என்று கூறியுள்ளார்.