21 வருடங்களுக்கு பிறகு ஒரே வருடத்தில் வெளியாகும் சூர்யாவின் 3 திரைப்படங்கள்
சூர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 'சிங்கம்' படத்தைத் தொடர்ந்து திரையரங்குகள் மூலமாக மிகப்பெரிய வெற்றியை அவருக்கு 'கருப்பு' படம் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த படமும் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா கதாநாயகனாக நடித்த மூன்று படங்கள் ஒரே வருடத்தில் வெளியாவது இந்த 2026ல் தான். இதற்கு முன்னதாக, 2005ல் சூர்யா நடித்த 3 படங்கள் ('மாயாவி, கஜினி, ஆறு') ஒரே ஆண்டில் வெளியாகி இருந்தன. இடையே 2010, 2011, 2022 ஆகிய வருடங்களில் சூர்யாவின் மூன்று படங்கள் வெளியானாலும் கூட, அதில் ஒன்று அல்லது இரண்டு படங்களில் அவர் கேமியோவாகத்தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.