சிரஞ்சீவி பிறந்தநாளில் 158வது படத்தலைப்பு: பிரத்யேகக் காட்சிகளுடன் தியேட்டரில் வெளியாகிறது!
நடிகர் சிரஞ்சீவி தனது பிறந்தநாளை ஆகஸ்ட் 22 அன்று கொண்டாட உள்ள நிலையில், இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட உள்ளது. தனது பிறந்தநாளில் தனது158வது படத்தின் முதல் காட்சி வெளியிடப்படும் என்று சிரஞ்சீவி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, இந்த தலைப்பு பிரத்யேகக் காட்சி ஆகஸ்ட் 22 அன்று தெலுங்கு மாநிலங்களில் உள்ள சில குறிப்பிட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இது சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் தங்களது தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் தலைப்பில் 'கதிரி' என்ற வார்த்தை இடம்பெறும் என்று சிரஞ்சீவி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அதுவே படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இந்த பிரத்யேகக் காட்சியில் தெரியவரும். இப்படத்தில் அனஸ்வர ராஜன் மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தெலுங்கில் அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமாகும். மேலும், 'வால்டேர் வீரய்யா' படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி - பாபி கொல்லி கூட்டணி மீண்டும் இதில் இணைந்துள்ளது.