உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் இணைந்த சீமான்

சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படத்தில் இணைந்த சீமான்


நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகாவை வைத்து ‛தாய் கிழவி' என்ற படத்தை இயக்கி, முதல் படத்தையே வெற்றி படமாக கொடுத்தவர் சிவக்குமார் முருகேசன். இப்படம் பெரிய வெற்றிப் பெற்றது. அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ‛சேயோன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரையை மையமாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறார்.

நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான சீமான் இப்படத்தில் இணைந்திருப்பதாக வீடியோ வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் அன்பறிவு சகோதரர்கள் ஸ்டண்ட் அமைத்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !