செப்டம்பர் 11ல் ஓடிடியில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
ADDED : 9 hours ago
வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி வெளியான படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இப்படம் 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதிக விலைக்கு விற்கப்பட்ட காரணத்தால், படம் நஷ்டத்திலிருந்து தப்பித்து குறைவான லாபத்துடன் அதன் தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 11ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.
தியேட்டர்களில் படம் வெளியான ஒரு மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஓடிடிக்கே ஏற்ற ஒரு படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.