Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய மாத ராசி பலன்

rasi

கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்: உடலுக்கும் மனதிற்கும் காரகனான சந்திரன், தன புத்திரக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு  இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும்.  தொழிலில் முன்னேற்றம் தோன்றும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற தொடங்கும். இயந்திரத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வாகனப் பயணத்தில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிராக சிலர் சதிகள் செய்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்திடக்கூடிய வலிமை உங்களுக்கு உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிர்ப்புகள் விலக ஆரம்பிக்கும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலை இப்போது ஏற்படும். பணியில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார். வெளிநாட்டு வர்த்தகம் அனுகூலமாகும். கலைத்துறையினருக்கு நீண்டநாள் கனவு நினைவாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். அடிப்படை வசதிகள் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலக நீங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 10
அதிர்ஷ்ட நாள்: ஜன. 20,21,29,30. பிப். 2,3,11,12.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட நன்மை அதிகரிக்கும்.

பூசம்: கர்மக்காரகன், ஆயுள் காரகனான சனி, மனோ காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய மாதமாக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உதவிகள் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய முயற்சி லாபமாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியாளர்களின் நிலை உயரும்.  தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களின் செல்வாக்கு உயரும். உங்களின் சொல், வார்த்தைக்கு மதிப்புண்டாகும். உங்கள் திறமையை மேலிடத்தில் அங்கீகரிப்பார்கள். மனதில் இருந்த குழப்பம் விலக ஆரம்பிக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தொழில், வியாபாரத்தில் சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெரியோர்களின் ஆதரவு அதிகரிக்கும். தெய்வ அருள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். பெண்களின் விருப்பங்கள் பூர்த்தியாகும் மாதமாக அமையும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 10,11.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 17, 20, 26,29, பிப். 2,8,11.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.

ஆயில்யம் : வித்யாகாரகனான புதன், மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். வழக்குகளால் உண்டான சங்கடங்கள் நீங்கும். குரு பகவானின் பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி முன்னேற்றம் தோன்றும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடலில் இருந்த சங்கடங்கள் நீங்க ஆரம்பிக்கும். மறைமுகத் தொல்லைகளை கண்டறிந்து எச்சரிக்கை அடைவீர்கள். வெளிவட்டாரத்தில், பொது வாழ்க்கையில் உங்கள் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவுகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.
சந்திராஷ்டமம்: பிப். 11,12
அதிர்ஷ்ட நாள்: ஜன. 20,23,29. பிப். 2,5,11.
பரிகாரம்:  புதன் பகவானுக்கு பச்சை ஆடை அணிவித்து வழிபட நன்மை அதிகரிக்கும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us