Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய மாத ராசி பலன்

rasi

மீனம்

பூரட்டாதி 4 ம் பாதம்: எதையும் முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம்.  ராசிநாதன் சாதகமாக இல்லை என்றாலும் அவருடன் செவ்வாய் இணைந்திருப்பதால் முயற்சிகள் பலிக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். பணியாளர்களுக்கு மற்றவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொடர்ந்து குரு பகவானின் பார்வைகள் சப்தம, பாக்ய, இலாப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் மனதில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நட்புகளால் நன்மை உண்டாகும். கூட்டுத்தொழிலில் லாபம் தோன்றும். பெரிய அளவில் முதலீடு செய்தும் எதிர்பார்த்த வருவாய் வரவில்லையே என்ற நிலை மாறும். வரவேண்டிய பதவி உயர்வு வரும். இடமாற்றம் கிடைக்கும். வாழ்வில் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை, தெய்வம் நமக்கு கண் திறக்கவில்லை என்று வருந்துவோருக்கு  குலதெய்வ அருளும் இஷ்ட தெய்வ அனுக்கிரகமும்  உண்டாகும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். உங்கள் மனதில் புதிய உற்சாகம் தோன்றும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். எதிர்பார்த்த பணம் வரும். கடன்கள் அடையும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அவமானம் நெருக்கடி விலகும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 7.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,30. செப். 3,12.
பரிகாரம் நவக்கிரக குரு பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திரட்டாதி: வாழ்வின் உயரத்திற்கு மெல்ல மெல்ல செல்லும் தங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டமான மாதம். 6 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சூரியனால் இதுவரை உங்களுக்கு இருந்த பாதிப்பு நெருக்கடி யாவும் விலகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகுவதுடன் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மறைமுக எதிரி விலகுவர். தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர். வழக்கு விவகாரங்களில் சாதகம் உண்டாகும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும்  ராசிநாதனுடன் செவ்வாய் இணைவு பெறுவதால் குரு மங்கள யோகம் உண்டாகி  கனவுகளை நனவாகும். நிறைவேறாமல் போன வேலை நடக்கும். குருவருளால் விலகிச்சென்றவர் மீண்டும் வருவர். திருமண வயதினருக்கு வரன் வரும். மறுமணத்திற்காக முயற்சி மேற்கொண்டோருக்கு விருப்பப்பட்ட துணை அமையும். தடைப்பட்ட பணம் வரும். பெரியோரின் ஆசீர்வாதம் உண்டாகும். சுக்கிரனால் சிலருக்கு அவப்பெயர் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம் தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப். 7,8.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,21,26,30. செப். 3,12.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட வளம் உண்டாகும்.

ரேவதி: இளகிய மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நினைப்பது நிறைவேறும் மாதம்.  நட்சத்திர நாதன் புதன் மாதத்தின் முற்பகுதியில் உங்களுக்கு மன ரீதியாக சில சங்கடங்களை ஏற்படுத்தி அவமானம் ஏற்பட்டாலும் உங்கள் நிலையை உயரும். செல்வாக்கை அதிகரிப்பார். வசதி வாய்ப்புகளை உண்டாக்குவார். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். குருவின் பார்வையால் திருமண வயதினருக்கு வரன்வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் அனுகூலம், ஆதாயம் ஏற்படும். தெய்வ அருள் பக்க பலமாகும். நண்பர்களால் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் மறுமணத்திற்குரிய முயற்சியை மேற்கொள்வர். செலவு கட்டுப்படும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். பண நெருக்கடி விலகும். முயற்சி  வெற்றியாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ராசிக்குள் ராகு சஞ்சரிக்கும் நிலையில் ஆக 27 முதல் 7 ம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் மனம் தடுமாறும். எதிர்பாலினரின் சூழ்ச்சி வலைக்குள் ஒரு சிலர் சிக்குவதுடன் அதனால் அவமானங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் உங்கள் செயல்களில் எச்சரிக்கை அவசியம். 
சந்திராஷ்டமம்: செப். 8,9.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,23,30. செப். 3,5,14.
பரிகாரம்: சொக்கநாதரை வழிபட வளம் உண்டாகும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us