உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'ராமா' டீசர்

24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'ராமா' டீசர்


நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஹன்ஸ் ஜிம்மர், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தின் 'ராமா' அறிமுக டீசர் நேற்று வெளியானது.

பிரம்மாண்டமான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்த டீசர் 24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளை யுடியூப் தளத்தில் கடந்துள்ளது. ஒரு சேனலில் 13.9 மில்லியன் பார்வைகளையும், மற்றொரு சேனலில் 3.9 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. கடந்த வருடம் வெளியான படத்தின் அறிமுக வீடியோ இரண்டு சேனல்களில் 13.1 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றிருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 'ராமா' டீசர் கூடுதல் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இருந்தாலும் நேற்று வெளியான 'ராமா' டீசர் அதிகப் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹிந்திப் படங்களைப் பொறுத்தவரையில் 2023ல் வெளிவந்த 'டங்கி' படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 58.5 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !