உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இரட்டை வேடங்களில் ராதா நடித்த படம்

பிளாஷ்பேக் : இரட்டை வேடங்களில் ராதா நடித்த படம்

நடிகை ராதா இரட்டை வேடங்களில் நடிப்பது மிகவும் அரிதானது. தெலுங்கு படம் ஒன்றில் அம்மா - மகளாக நடித்திருந்தார். இரண்டு வேடங்களில் அவர் நடித்த படங்களிலேயே முக்கியமானது 'சின்னப்பதாஸ்'. சீ.வி ராஜேந்திரன் இயக்கிய இந்த படத்தில் சத்யராஜ் நாயகனாக நடித்திருந்தார். இது 'இன்சப்' என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். சித்ரா ராமும், சித்ரா லட்சுமணனும் தயாரித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார்.

கதையின் நாயகனான சின்னப்பதாஸ் ஒரு சட்டக் கல்லூரி பேராசிரியர். தனது சகோதரியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற ஊழல் அமைச்சர்களின் பிள்ளைகளான ரவுடிகளைத் தாக்கியதால், தனது ஆசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். வேறு வழியின்றி, சின்னப்பதாஸ், ரவி பிரகாஷின் கடத்தல் கும்பலில் சேர நேரிடுகிறது. மீண்டும் அமைச்சரின் மகன் திலீப் ராதாவை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றபோது, ​​அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இது தொடர்பாக துப்பறியும் போது சின்னப்பதாஸ், ராதாவைப் போலவே தோற்றமளிக்கும் இரட்டைச் சகோதரியான டாக்டர் கவிதாவைக் கண்டு அவர் அதிர்ச்சியடைகிறார். பின்பு அவரைக் கொண்டு மந்திரியின் மகன்களை எப்படி சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது கதை. இது ஓரளவுக்கு வரவேற்பு பெற்ற படம். சி.வி ராஜேந்திரன் இயக்கிய கடைசி படம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !