Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
மீனம்: வராகியை வழிபடுபவருக்கு நல்லதே நடந்தேறும்.
பூரட்டாதி 4: வக்கிர குருவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வீடுதேடி வருவர். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனிக்கிழமை சிந்தித்து செயல்படவும்.

உத்திரட்டாதி: ஆறாமிட கேதுவும், லாபஸ்தான சூரியன் செவ்வாயும் செல்வாக்கை உயர்த்துவர். இழுபறியாக இருந்த வழக்கை முடித்து வைப்பர். ஆரோக்யமாக நடைபோட வைப்பர். நேற்றைய கனவு நனவாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

ரேவதி: விரய ஸ்தானத்தில் புதன், சூரியன் ராகு சஞ்சரிப்பதால் புதிய முதலீட்டில் கவனம் தேவை. வரவைவிட செலவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் அவசரப்பட்டு எந்த வேலைகளிலும் ஈடுபட வேண்டாம். லாப சூரியனால் அரசுவழி வேலைகள் சாதகமாகும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 7.2.2026 மாலை 4:01 மணி - 10.2.2026 அதிகாலை 3:00 மணி 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us