Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன்  (27.6.2025 - 3.7.2025)

கடகம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை தரும்.
புனர்பூசம் 4: குரு அஸ்தமனமாகி இருப்பதால் நெருக்கடி குறையும். சூரியன் செலவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு மருத்துவ செலவை உண்டாக்குவார். குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்ப நலனில் அக்கறை கொள்வது அவசியம்.
பூசம்: சனி, ராகு சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். தொழிலில் நெருக்கடி கூடும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். கடன் கொடுத்தவர்களால் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டி வரும். உடல்நிலையிலும் சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
ஆயில்யம்: வாரத்தின் தொடக்கத்தில் புதன் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். ஞாயிறு முதல் ஜென்ம ராசிக்குள் புதன் சஞ்சரிப்பதால் நெருக்கடி குறையும். உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது நல்லது. 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us