முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
துலாம்: வீரராகவப் பெருமாளை வழிபட சங்கடம் விலகும்.
சித்திரை 3,4: குரு மங்கள யோகம் உங்களை உயர்த்தும். செல்வாக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். இதுவரை இருந்த பிரச்சனை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். திங்கள் செவ்வாயில் பொறுமை காப்பது நல்லது.
சுவாதி: கேள்விக்குறியாக இருந்த முயற்சி லாபம் அடையும். உடல்நிலை சீராகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சி சாதகமாகும். லாப கேதுவால் பணவரவு அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட போராட்டநிலை மாறும். செவ்வாய்க்கிழமை பொறுமையாக செயல்படுவது அவசியம்.
விசாகம் 1,2,3: பாக்ய குருவால் புதிய திருப்பம் ஏற்படும். நேற்றைய கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தேவைக்கேற்ற வருமானம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். செவ்வாய் புதனில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 23.3.2026 காலை 7:04 மணி - 25.3.2026 காலை 9:22 மணி 
























