Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
கன்னி: ஆதி திருவரங்கனை வழிபட வளம் உண்டாகும்.

உத்திரம் 2,3,4: சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சுய தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அஸ்தம்: செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பிரச்னை, போராட்டங்கள் என்ற நிலை மாறும். விவகாரம் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.

சித்திரை 1, 2: ராசிநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு தள்ளிப்போன ஒப்பந்தம் கிடைக்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us